close
Choose your channels

மீண்டும் இணையும் ராபர்ட் - வனிதா.. ஜோவிகாவுக்கு என்ன வேலை?

Saturday, May 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் ஆகிய இருவரும் சேர்ந்து சில ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் ஆகிய இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் சேர்ந்து வாழ்ந்ததாகவும், இருவரும் சேர்ந்து ’எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ என்ற படத்தை தயாரித்ததாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் 2017 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இருவரும் தனித்தனியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் இருவரும் இணைந்துள்ளதாக தெரிகிறது. ’மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தில் வனிதா மற்றும் ராபர்ட் ஜோடியாக நடிக்கின்றானர். வனிதாவின் அப்பா அம்மாவாக ஸ்ரீகாந்த் மற்றும் ஷகிலாவும், மேலும் முக்கிய கேரக்டரில் பிரேம்ஜி, சுனில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் வனிதாவின் மகள் ஜோவிகா தயாரிப்பு துறையில் ஒரு முக்கிய பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் தயாரிப்பதாகவும் அவர் மனிதாவின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment