வனிதா எனக்கு அம்மா மாதிரி: டிஸ்சார்ஜ் ஆகி வந்த பீட்டர்பால் வெளியிட்ட வீடியோ

சமீபத்தில் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பீட்டர்பால் திடீரென உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி விட்டதாக தெரிகிறது. இது குறித்து பீட்டர் பால் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம். இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்கு திடீரென்று உடல் நலமில்லாமல் போனதால், நான் சென்னை மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வந்தேன். தற்போது பரிபூரணமாக குணமாகி வீடு வந்து திரும்பியுள்ளேன். அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிலையில் நான் வீடு வந்தவுடன் என்னை பற்றிய நிறைய வதந்திகளை பார்த்தேன். அவை எதுவுமே உண்மை கிடையாது. நான் பூரண நலத்துடன் தற்போது வீடு திரும்பியுள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

இன்று நான் உங்கள் முன் நின்று பேசிக்கொண்டு இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் வனிதா தான். இரண்டு நாள் நான் மருத்துவமனையில் இருந்தபோது எனக்கு அம்மா ஸ்தானத்தில் இருந்து என்னை கவனித்துக்கொண்டார். அப்பொழுதுதான் நான் நினைத்தேன் நான் வாழ்க்கையில் எவ்வளவு மிஸ் செய்திருக்கின்றேன் என்று. நான் தனியாக இருந்த காலத்தில் ஹோட்டலில் சாப்பிட்டு ஒரு பேச்சிலர் வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தேன். தனிமையை மிகவும் அனுபவித்தேன். ஆனால் தற்போது எனக்கு உண்மையான பாசம் கிடைப்பதற்கு வனிதாதான் காரணம். அதற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

இன்றைக்கு நான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் வனிதா தான். அவர் இல்லை என்றால் நான் இல்லை. அவர்தான் எனக்கு அம்மா மாதிரி அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கின்றார். அதற்காக நான் கடவுளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்’ என்று பீட்டர் பால் தெரிவித்துள்ளார்.
 

More News

கடலூர் துறைமுகத்தில் வணிகக் கப்பல் போக்குவரத்து- முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை!!!

கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிகக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

கொரோனா குடும்பத்துக்கே ஆப்பு வைக்கும் புதிய தடுப்பூசி!!! விஞ்ஞானிகள் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!!!

மனிதன் மற்றும் விலங்கு இனத்திற்கு ஆபத்து விளைவிக்கும் பல வகையான நோய்த்தொற்றுகள் காலந்தோறும் பரவி வருகிறது.

'சூரரை போற்று' ஓடிடி ரிலீஸ் குறித்து விஜய் பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிக்கை

சூர்யா நடித்த 'சூரரை போற்று' திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக சூர்யா அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.

'அரியர் மாணவர்களின் அரசனே': முதல்வருக்கு புகழாராம் சூட்டிய மாணவர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி கல்லூரிகளில் உள்ள அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 

என்னுடைய சூப்பர்வுமனின் ஒன்மோர் புகைப்படம்: இணையத்தில் வைரல்

ஜிவி பிரகாஷ்-சைந்தவி நட்சத்திர தம்பதிக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது என்பதும் ஜிவி பிரகாஷின் புதிய வரவான குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள் குவிந்தது