close
Choose your channels

என்னுடைய சூப்பர்வுமனின் ஒன்மோர் புகைப்படம்: இணையத்தில் வைரல்

Thursday, August 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ்-சைந்தவி நட்சத்திர தம்பதிக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது என்பதும் ஜிவி பிரகாஷின் புதிய வரவான குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே. இந்த குழந்தைக்கு ஜிவி பிரகாஷ்-சைந்தவி தம்பதியினர் ’அன்வி’ என்று பெயர் வைத்தனர்.

இந்த் நிலையில் நேற்று முதல்முறையாக ஜிவி பிரகாஷ் தனது செல்ல மகள் அன்வியின் புகைப்படத்தை பதிவு செய்தார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் ரீடுவிட்டுக்களும் குவிந்த நிலையில் தற்போது தனது குழந்தையின் மற்றுமொரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

என்னுடைய சூப்பர்வுமனின் இன்னொரு புகைப்படம் என்று ஜிவி பிரகாஷ் பதிவு செய்துள்ள புதிய புகைப்படமும் வைரலாக தொடங்கிவிட்டது. ஒரு குட்டி தேவதை தூங்குவது போல் இருக்கும் இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து முடித்துள்ள ’ஐங்கரன்’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘அடங்காதே’, ‘ஜெயில்’ ‘4ஜி’ உள்பட ஒருசில திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளன என்பதும், லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் ஒவ்வொன்றாக இந்த படங்கள் ரிலீஸ் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.