close
Choose your channels

'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சியில் வனிதா.. உறுதி செய்த புகைப்படங்கள்..!

Thursday, April 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது ’குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சியில் தனது மகள் ஜோவிகா கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் நான் கலந்து கொள்வேன் என்றும் கூறியிருந்தார்.

ஏற்கனவே குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற நிலையில் அவர் மீண்டும் எப்படி கலந்து கொள்வார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இந்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை, குரேஷி, சுனிதா, புகழ், ராமர் ஆகியோர் கோமாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் சில புரமோ வீடியோக்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது மற்றொரு புரமோ வீடியோ படமாக்கப்பட்டதாகவும் அதில் தான் வனிதா விஜயகுமார் தோன்றியுள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்த வீடியோவை வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மொத்தத்தில் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் கலந்து கொள்வதை தான் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.