close
Choose your channels

ஜோவிகா தந்தை அனுப்பிய வீடியோவை பகிர்ந்த வனிதா..  விசித்ராவுக்கு பதிலடியா?

Saturday, October 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜோவிகா குறித்த வீடியோ ஒன்றை அவரது தந்தை வனிதாவிற்கு அனுப்பி வைக்க, அந்த வீடியோவை வனிதா தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் வாக்குவாதங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக விசித்ரா மற்றும் ஜோவிகா ஆகிய இருவரிடையே படிப்பு குறித்த வாக்குவாதம் நடந்தது.

குறைந்தபட்ச படிப்பு பிளஸ் டூ அல்லது டிகிரி படிக்க வேண்டும் என்று ஜோவிகாவுக்கு விசித்ரா அறிவுரை கூற அதற்கு ஜோவிகா தனக்கு படிப்பு வரலை என்பதற்காக தனக்கு படிக்கத் தெரியாது என்று அர்த்தமல்ல எனக்கு எழுத படிக்க தெரியும் என்று கூறினார்.

அப்போது விசித்திரா எங்கே தமிழில் எழுதிக் காட்டு என்று கூற ஜோவிகா ஆவேசமடைந்தார். எல்லோரும் டாக்டராகவும் இஞ்சினியராகவும் முடியாது, எல்லோரும் டாக்டராகி விட்டால் கம்பவுண்டர் வேலையை யார் பார்ப்பது, படிப்பை குழந்தைகள் மேல் திணிப்பதால் தான் பல குழந்தைகள் தற்கொலைக்கு முயல்கின்றார்கள். குழந்தைகளுக்கு என்ன பிடித்ததோ அதை செய்ய அவர்களை அனுமதியுங்கள் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜோவிகாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று விசித்ரா கூறிய நிலையில் ஜோவிகா தந்தை அவர் அழகாக தமிழ் படிக்கும் வீடியோ ஒன்றை வனிதாவுக்கு அனுப்பி, இதை உடனே பதிவு செய்ய என்று கூறியிருந்தார். இதனை அடுத்து வனிதா இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் ஜோவிகா மிக அழகாக தமிழ் படிக்கும் காட்சிகள் உள்ளது. இது விசித்ராவுக்கான பதிலடி வீடியோவாக கருதப்படுகிறது.

மேலும் வனிதா இந்த வீடியோவை கமல்ஹாசனுக்கு டேக் செய்து ‘சார் ஆரம்பிக்கலாம்ங்களா’ என்று பதிவு செய்துள்ளதால் இதுகுறித்து இன்று கமல்ஹாசன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.