திருமண தேதியை 27 என தேர்வு செய்தது ஏன்? கண்ணீருடன் பதிலளித்த வனிதா

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா வரும் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பில் பேசிய வனிதா இந்த திருமணம் ஏன் என்றும், திருமண தேதியை 27ஆம் தேதி என தேர்வு செய்தது ஏன் என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நான் ஒரு யூடியூப் சேனல் வைத்துள்ளேன். அந்த சேனலில் தொடர்ந்து வீடியோக்கள் பதிவு கொண்டிருந்தபோது திடீரென லாக்டவுன் ஏற்பட்டு விட்டதால் டெக்னீசியன்கள் யாரும் இல்லாமல் தவித்தேன். அந்த சமயத்தில்தான் விஷுவல் எபெக்ட் இயக்குநர் பீட்டர் பால் எனக்கு உதவி செய்ய அடிக்கடி வீட்டிற்கு வந்தார்.

அவர் எனது குழந்தைகளிடமும் அன்புடன் பழக ஆரம்பித்ததால் அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல் இருந்தார். என்னுடைய யூடியூப் சேனலுக்கு அவர் பெரும் உதவி செய்தார். இந்த நேரத்தில் திடீரென அவர் ஒருநாள் எனக்கு புரபோஸ் செய்த போது எனது மகள்கள் சம்மதிக்குமாறு என்னை வற்புறுத்தினார்கள். நாங்களெல்லாம் திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டால் நீங்கள் தனியாக இருப்பதை எங்களால் தாங்க முடியாது என்று எனது மகள்கள் வற்புறுத்தியதாலும், பீட்டர் பால் காட்டிய அன்பும் நான் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க காரணமாயிற்று.

இந்த திருமண தேதியை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஜூன் 27ஆம் தேதி கண்ணில்பட்டது. ஏனெனில் அதுதான் என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமண நாள். என் அம்மா அப்பா திருமண நாளில் திருமணம் செய்து கொண்டால் அவர்களுடைய ஆசி எனக்கு கிடைக்கும் என்பதற்காக அந்த நாளைத் தேர்வு செய்தேன். இதை நான் பீட்டர் பாலிடம் கூறியபோது அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார்’ என்று வனிதா கூறினார். இதனை அவர் கூறியபோது அவர் இடையிடையே கண்ணீர் வடித்தார். வனிதாவின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More News

உலக வரைபடத்தை இலைகளில் வரைந்து தத்துவ மழை பொழிந்த சமந்தா: 

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய சமந்தா, இந்த லாக்டவுன் விடுமுறையை வீட்டிலேயே விவசாயம் செய்து பயனுள்ளதாக கழித்து வருகிறார்.

உடுமலை சங்கர் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு: மரண தண்டனை ரத்து செய்யப்படுமா?

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியை சேர்ந்த கௌசல்யா என்ற கல்லூரி மாணவி தன்னுடன் படித்த சங்கர் என்ற மாணவரை கடந்த 2015 ஆம் ஆண்டு காதலித்தார்.

ஓஷோவை எனக்கு அறிமுகம் செய்தவர்: மறைந்த இயக்குனர் சச்சி குறித்து பிரபல தமிழ் நடிகை

மலையாள திரையுலகில் 'அய்யப்பனும் கோஷியும்' என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய சச்சிதானந்தம் என்ற சச்சி சமீபத்தில் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தது

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் வீடியோ

தனுஷ் நடித்த வெற்றிப் படங்களில் ஒன்று 'மாரி'. இந்த படத்தில் தனுஷ் சிக்ஸ்பேக் வைத்திருக்கும் ஒரு காட்சியில் நடித்து இருப்பார். இந்த காட்சியை பலர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்னை கிண்டலடித்தனர்

நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா???

நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது, பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு வரும் என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்