close
Choose your channels

எல்லாரும் மாமா வேலை தான் பாக்குறாங்க.. பிக்பாஸ் போட்டியாளர்களை ரோஸ்ட் செய்த வனிதா!

Wednesday, November 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் எல்லாரும் மாமா வேலை தான் பார்க்கிறார்கள் என்றும் இது பிக்பாஸ் வீடா? அல்லது மாமா வீடா? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது என்றும் வனிதா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரோஸ்ட் டாஸ்க் நடந்த நிலையில் இந்த டாஸ்க் குறித்து வனிதா விஜயகுமார் கூறியபோது, ‘உண்மையில் இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியா? அல்லது மாமா நிகழ்ச்சியா? என எனக்கு சத்தியமாக புரியவில்லை.

இந்த வீட்டில இருக்குறவங்க எல்லாரும் மாமா வேலை பார்க்குறாங்க. கொஞ்சம் கூட நெறிமுறையே கிடையாது. மணிகண்டனிடம் அமுதவாணன் ரோஸ்ட்டிங் டாஸ்க்கில் குயின்ஸியை நீ லவ் பண்றியான்னு கேக்குறான். மணிகண்டனுக்கு வெளியில் ஒரு மனைவி குழந்தை இருக்கிறது என்று தெரியாதா? இப்படியா ரோஸ்ட் பண்றது?

ஒரு விஷயம் உண்மையாக இருந்தால், அதை நக்கல் நய்யாண்டியுடன் பேசுவது தான் ரோஸ்ட், பொய்யாக ஒரு விஷயத்தை எப்படி பேசலாம்? எதுக்கு இந்த மாதிரி நான்சென்ஸ்ஸா பேசுறான்? என்று பிக்பாஸ் போட்டியாளர்களை வனிதா ரோஸ்ட் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.