இந்தியாவுக்கு ஆதரவு தர இங்கிலாந்து பறந்த த்ரிஷா-வரலட்சுமி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் இந்தியா கலந்து கொள்ளும் போட்டியை நேரில் கண்டு ரசிக்க கோலிவுட் பிரபலங்கள் இங்கிலாந்து சென்று வருகின்றனர் என்பது தெரிந்ததே.

இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியை சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோர் நேரில் கண்டு ரசித்ததையும், இந்தியா-மே.இ.தீவுகள் அணிகள் மோதிய போட்டியை சரத்குமார்-ராதிகா ஆகியோர் நேரில் கண்டு ரசித்ததையும் செய்தியாக ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நாளை பிர்மிங்காம் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறுவது மட்டுமின்றி இங்கிலாந்தை தொடரில் இருந்து வெளியேற்றவும் வாய்ப்பு உள்ளது. இதனால் நாளைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க இங்கிலாந்துக்கு த்ரிஷா, வரலட்சுமி, பிந்துமாதவி ஆகியோர் நேரில் செல்கின்றனர். இங்கிலாந்து கிளம்புவதற்கு முன் விமான நிலையத்தில் இவர்கள் விமான நிலைய பெண் ஊழியர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வரலட்சுமியின் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவாகியுள்ளது.

More News

முடியலைன்னா வீட்டுக்கு போ! பிக்பாஸ் ஓனர் போல் அடாவடி செய்யும் வனிதா!

பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியலைன்னா வீட்டுக்கு போ என மீரா மிதுனை வனிதா பேசியது கொஞ்சம் ஓவராகவே இருப்பதாகவே பார்வையாளர்கள் மட்டுமின்றி பிக்பாஸ் போட்டியாளர்களும் கூறி வருகின்றனர்.

சித்தார்த்தை அடுத்து ஹாலிவுட் படத்தில் அரவிந்தசாமி

ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான 'தி லயன் கிங்' படத்தின் தமிழ் டப்பிங் படத்தில் சிம்பா என்ற சிங்கத்திற்கு சித்தார்த் குரல் கொடுத்ததாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

ஹூக் மாட்டிவிட வேற ஆளே கிடைக்கலையா மீரா? நெட்டிசன்கள் கலாய்ப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் கடந்த ஒரு வாரமாக பார்த்ததில் வனிதா மற்றும் மீராமிதுன் ஆகிய இருவருமே பிரச்சனைக்குரியவர்களாக தென்படுகின்றனர்.

5ஆம் தேதி திருமணம், 9ஆம் தேதி வரை ஜெயில்: மது ஒழிப்பு போராளி நந்தினியின் நிலை

மது ஒழிப்புக்காக மாணவர் பருவம் முதல் போராட்டம் செய்து வரும் நந்தினிக்கு வரும் ஜூலை 5ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ள நிலையில்

இனிமேல் கியூப் கட்டணம் இல்லை: பாரதிராஜாவின் முக்கிய அறிவிப்பு!

தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தமிழக அரசு தனி அதிகாரியை நியமனம் செய்ததும், தனி அதிகாரிக்கு ஆலோசனை வழங்க பாரதிராஜா உள்பட ஏழு பேர்களை ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்ததும் தெரிந்ததே