'வீரன் வேலுத்தம்பி' கேரக்டரில் நடிக்கும் விஜய்யின் ' வாரிசு ' நடிகர்!

  • IndiaGlitz, [Tuesday,August 23 2022]

தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் வீரன் வேலுத்தம்பி என்ற சுதந்திர போராட்ட வீரர் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் லேட்டஸ்டாக இணைந்தவர் கணேஷ் வெங்கட்ராமன் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வீரன் வேலுத்தம்பி வேடத்தில் அவர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரமடைந்த 75 ஆவது சுதந்திர தினத்தை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் 75 சுதந்திர போராட்ட வீரர்கள் தொடர் ஒன்று பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி உள்பட பல மொழிகளில் வெளிவர உள்ளது.

இந்த தொடரில் 75 சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ’வீரன் வேலுத்தம்பி கேரக்டரில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்க உள்ளார். இந்த கேரக்டரில் நடிப்பது குறித்து அவர் கூறியபோது, ‘வெகுகாலமாக சரித்திர கதைகளில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், அது தற்போது நிறைவேறிவிட்டது. நம் வரலாற்றில் சொல்லப்படாத பல சரித்திர நாயகர்கள் உள்ளனர். அவ்வாறு உருவாகும் ஒரு தொடரில் நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.

More News

'கபாலி' படத்தால் மன உளைச்சல் அடைந்தேன்: பா ரஞ்சித்

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தை இயக்கிய பிறகு மன உளைச்சலில் இருந்தேன் என்றும் அந்த மன உளைச்சலை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தான் தீர்த்து வைத்தார்

பொது இடத்தில் நிர்வாணமாக குளிக்க மனைவியை கட்டாயப்படுத்திய கணவர் கைது: அதிர்ச்சி காரணம்!

பொது இடத்தில் நிர்வாணமாக குளிக்க மனைவியை கட்டாயப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டிருப்பது புனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் அடுத்த பெரிய படம்: அதிரடி அறிவிப்பா?

கடந்த சில மாதங்களாக தமிழ் திரையுலகில் வெளியாகும் பெரிய நட்சத்திரங்களின் படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

சிம்புவுடன் மோதும் அருண்விஜய்: அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸாகும் படங்கள்!

சிம்பு மற்றும் அருண் விஜய் படங்கள் அடுத்தடுத்த நாட்களில் ரிலீசாக உள்ளதை அடுத்து இரண்டு படங்களும் அதிரடியாக மோத உள்ளன 

6 மாத சிறை தண்டனை தீர்ப்பு: இயக்குனர் லிங்குசாமி விளக்கம்!

செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை என நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து இயக்குனர் லிங்குசாமி தரப்பில்