close
Choose your channels

'வீரன் வேலுத்தம்பி' கேரக்டரில் நடிக்கும் விஜய்யின் ' வாரிசு ' நடிகர்!

Tuesday, August 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் வீரன் வேலுத்தம்பி என்ற சுதந்திர போராட்ட வீரர் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் லேட்டஸ்டாக இணைந்தவர் கணேஷ் வெங்கட்ராமன் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வீரன் வேலுத்தம்பி வேடத்தில் அவர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரமடைந்த 75 ஆவது சுதந்திர தினத்தை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் 75 சுதந்திர போராட்ட வீரர்கள் தொடர் ஒன்று பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி உள்பட பல மொழிகளில் வெளிவர உள்ளது.

இந்த தொடரில் 75 சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ’வீரன் வேலுத்தம்பி கேரக்டரில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்க உள்ளார். இந்த கேரக்டரில் நடிப்பது குறித்து அவர் கூறியபோது, ‘வெகுகாலமாக சரித்திர கதைகளில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், அது தற்போது நிறைவேறிவிட்டது. நம் வரலாற்றில் சொல்லப்படாத பல சரித்திர நாயகர்கள் உள்ளனர். அவ்வாறு உருவாகும் ஒரு தொடரில் நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.