close
Choose your channels

'வாரிசு' - 'துணிவு': சென்னை, தமிழகம் மற்றும் உலக அளவிலான 2 நாள் வசூல் விபரங்கள்!

Friday, January 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக நேற்று முன்தினம் வெளியானது என்பதும் இரண்டு திரைப்படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இரண்டு படங்களுமே நல்ல வசூலை பெற்று வரும் நிலையில் இரண்டு நாள் சென்னை, தமிழகம் மற்றும் உலக அளவிலான வசூல் குறித்து தற்போது பார்ப்போம்.

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் தமிழகத்தில் இரண்டு நாள் வசூலாக 30 கோடி வசூலாகியுள்ளது. அதேபோல் தமிழகம் தவிர பிற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் வசூல் செய்த தொகை ரூ.68 கோடியாகும். எனவே இரண்டு நாட்களில் இந்த படம் ரூ.98 கோடி வசூலாகியுள்ளது.

அதேபோல் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் தமிழகத்தில் இரண்டு நாள் வசூலாக 33 கோடி வசூலாகியுள்ளது. அதேபோல் தமிழகம் தவிர பிற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் வசூல் செய்த தொகை ரூ.62 கோடியாகும். எனவே இரண்டு நாட்களில் இந்த படம் ரூ.95 கோடி வசூலாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை ’துணிவு’ முதல் நாளில் ரூ.1.12 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.1.07 கோடியும் வசூலாகியுள்ளது. அதேபோல் சென்னையில் ‘வாரிசு’ முதல் நாளில் ரு.1.10 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.1.06 கோடியும் வசூலாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment