close
Choose your channels

'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூவின் அடுத்த தமிழ்ப்படம்.. ஹீரோ இந்த மாஸ் நடிகரா?

Thursday, April 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்த பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு அடுத்ததாக தமிழ் திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாகவும் அந்த படத்தில் ஒரு மாஸ் ஹீரோ நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு ஏராளமான தெலுங்கு திரைப்படங்கள் தயாரித்த நிலையில் முதல் முறையாக அவர் தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தை தயாரித்தார் என்பதும் அந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது.

மேலும் அவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேம் சேஞ்சர்’ என்ற படத்தையும் தயாரித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு தமிழ் படத்தையும் அவர் தயாரிக்க உள்ளார்.

தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாக உள்ள அடுத்த தமிழ் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தனுஷ் ஏற்கனவே தனது 50வது படமான ’ராயன்’ என்ற படத்தை நடித்து இயக்கி முடித்துள்ள நிலையில் தற்போது அவர் ’குபேரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் தில் ராஜூ தயாரிக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.