விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: பிரபல அரசியல் கட்சி தலைவர்!

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் உறுப்பினர்கள் வெற்றி பெற்றதை அடுத்து அவர் அரசியலுக்கு வருவார் என்பதை கூற முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்போம் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 149 பேர் போட்டியிட்டார்கள் என்பதும் இவர்களின் 110 பேர் வெற்றிப் பெற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுக, அதிமுகவை அடுத்து அதிக அளவில் வெற்றி பெற்ற இயக்கம் விஜய் மக்கள் இயக்கம் தான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றியை அடுத்து அடுத்து சட்டசபை தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக உருவாகி விஜய் போட்டியிடுவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய் மக்கள் இயக்கத்தினர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றி, விஜய்யின் அரசியல் வருகைக்கான ஒத்திகையாக பார்க்க முடியாது என்றும், ஆனால் அதே நேரத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலைச்சிறுத்தைகள் அதை வரவேற்போம் என்றும் தெரிவித்துள்ளார்

வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக உருவெடுத்து போட்டியிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது இந்த போட்டியாளரா? வாக்குகள் விபரம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் நமீதா எதிர்பாராதவிதமாக வெளியேறிவிட்ட நிலையில் 17 போட்டியாளர்கள் தற்போது வீட்டில் உள்ளனர்.

ஐபிஎல் 2021- இல் அதிக ரன்கள், அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் யார்?

2021 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி முடிவடைந்து ஒருவழியாக சென்னை சூப்பர் கிங்ஸ்

'அண்ணாத்த' படத்தின் சென்சார் தகவல்: அட்டகாசமான போஸ்டர் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்

சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு இத்தனை கோடியா? பரிசுகள் விபரங்கள்!

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில்

வீட்டில் பொரி கடலை அதிகமா இருக்கா? ருசியான ஸ்நாக்ஸ் ரெடி!

ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டங்கள் முடிந்து எல்லா வீடுகளிலும் பொரி,