close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது இந்த போட்டியாளரா? வாக்குகள் விபரம்!

Saturday, October 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் நமீதா எதிர்பாராதவிதமாக வெளியேறிவிட்ட நிலையில் 17 போட்டியாளர்கள் தற்போது வீட்டில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த திங்களன்று இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவதற்கு நாமினேட் செய்யப்பட்ட நிலையில் 15 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டார்கள் என்பதும் தலைவர் பதவியில் இருக்கும் தாமரைசெல்வி மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவர் மட்டுமே நாமினேஷன் பட்டியலில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த திங்கள் முதல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளரை தேர்வு செய்ய வாக்குகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிகாரபூர்வமற்ற வகையில் இணையதளங்களில் நடந்த வாக்குப்பதிவின்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிக குறைந்த வாக்குகள் பெற்ற 4 பேர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது

அபினய், ஸ்ருதி, சின்னப்பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய நால்வரும் குறைந்த வாக்குகள் பெற்று உள்ளதாகவும் இதில் மிக குறைந்த வாக்குகள் அபிஷேக் ராஜா மற்றும் சின்னப்பொண்ணு பெற்று உள்ளதாகவும் எனவே இவர்கள் இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை வரும் ஞாயிறு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.