புத்தாண்டுக்கு பிக்பாஸ் போட்டியாளர் கொடுத்த இசை விருந்து: வைரலாகும் வீடியோ


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகமே நேற்று புத்தாண்டு தினத்தை கொண்டாடியது என்பதும் பல தலைவர்கள் மற்றும் திரையுலகினர் பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கிராமிய பாடகரும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவருமான வேல்முருகன் புத்தாண்டு தினத்தில் புத்தாண்டு பாடல் ஒன்றை பாடி அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த பாடல் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
வேல்முருகன் மற்றும் ஜிகேபி எழுதிய இந்த பாடலை வேல்முருகன் பாடியுள்ளது மட்டுமின்றி இந்தப் பாடலுக்கு அசத்தலாக நடனமும் ஆடி ஒரு இசை விருந்தையே அளித்துள்ளார். இதுவரை ஒரு கிராமத்து கெட்டப்புகளில் மட்டுமே வேல்முருகனை அதிகம் பார்த்த நிலையில் தற்போது அவர் இந்த வீடியோவில் மாடர்ன் டிரஸ்ஸில் அசத்தலாக டான்ஸ் ஆடி கலக்கி உள்ளதையும் பார்த்து மகிழலாம். இந்த பாடலுக்கும் வேல்முருகனின் நடனத்துக்கும் நெட்டிசன்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments