வேந்தர் மூவீஸின் 'கெட்ட சிவா மொட்ட சிவா' படபூஜை

  • IndiaGlitz, [Monday,August 03 2015]

வேந்தர் மூவீஸ் தயாரிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 'பாயும் புலி' படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி வரும் நிலையில், இன்று அந்த நிறுவனம் தயாரிக்கும் 'கெட்ட சிவா மொட்ட சிவா' படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜை விழாவில் லாரன்ஸ், டி.சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வருடத்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'காஞ்சனா 2' படத்தை இயக்கி நடித்த லாரன்ஸ், இந்த படத்திலும் ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆகிய 'பட்டாஸ்' படத்தின் ரீமேக்தான், இந்த கெட்ட சிவா மொட்ட சிவா' என்று கூறப்பட்டு வந்தபோதிலும், இதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடிக்ககூடிய நடிகை உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

ஆரஞ்சு மிட்டாய் இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி தயாரித்த நடித்த 'ஆரஞ்சு மிட்டாய்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களிடமும் ஊடகங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது. வயதான கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது......

எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்களை வாழ வைத்துதான் பழக்கம். 'புலி' இசைவிழாவில் விஜய்

இளையதளபதி நடித்த 'புலி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சிம்புதேவன், நட்டி நட்ராஜ், கே.எஸ்.ரவிகுமார், டி.ராஜேந்தர், ஜீவா, விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா உள்பட பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்......

விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் பாடும் 'புலி' பட பாடல்

விஜய் நடித்த 'புலி' படத்தின் பாடல் வெளியீடு இன்று சென்னை அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில்...

'பாகுபலி' படத்தை முந்தியது விஜய்யின் 'புலி'

தற்கால படங்களில் நடிகர்களின் பங்கு ஒரு திரைப்படத்திற்கு எந்த அளவு முக்கியமோ, கிட்டத்தட்ட அதே அளவுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் முக்கியம் பெற்று வருகின்றன....

ஆர்யாவின் 'யட்சன்' பட டிராக்லிஸ்ட்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' மற்றும் புரட்சி தளபதி விஷால் நடித்த 'பாயும் புலி' ஆகிய இரு படங்களின் பாடல்கள் இன்று வெளியாகவுள்ள நிலையில்...