close
Choose your channels

விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் பாடும் 'புலி' பட பாடல்

Sunday, August 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'புலி' படத்தின் பாடல் வெளியீடு இன்று சென்னை அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், இந்த படத்தின் பாடல் வரிகளை கவியரசர் வைரமுத்து வெளியிட்டு வருகிறார்.

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற விஜய்-ஸ்ருதிஹாசன் பாடிய 'வானவில் வட்டமாகுதே', விஜய்யின் அறிமுகப்பாடலான எங்கமக்கா எங்கமக்கா' பாடல் மற்றும் விஜய் - ஹன்சிகாவின் டூயட் பாடலான 'சொட்டவாள சொட்டவாள' ஆகிய பாடல்களின் வரிகள் வைரமுத்துவின் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் தற்போது விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி மற்றும் சுதீப் ஆகிய நான்கு பேர்களும் இணைந்து பாடுவதாக அமைந்த 'மன்னவனே மன்னவனே' பாடலின் வரிகளும் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பாடலின் வரிகளை தற்போது பார்ப்போம்.

பல்லவி:

ஹன்சிகா :
மன்னவனே! மன்னவனே!
மாயலோக மன்மதனே!
தீக்கடலை தாண்டிவரும்
தென்னவனே!

வல்லவனே! வல்லவனே!
யானைபலம் உள்ளவனே!
வானவில்லால் அம்பு விடும்
வல்லவனே!

கத்தியின்றி
ரத்தமின்றி
வெறும் கண்ணால்
கொலை செய்வாய்

இவள் ராணி கோட்டை இளவரசி
உனக்கென்ன வேண்டும்
பொன்னின் மலையா?
பெண்ணின் சிலையா?

சரணம்-1:

விஜய் :
கொள்கை மாற மாட்டேன் – உன்
கூண்டில் மாட்ட மாட்டேன்
சிறகு முளைத்த சிங்கம் நானே இப்போது

ஹன்சிகா :
என் வானம் தாண்டிச் செல்ல – நீ
மாயப் பறவை அல்ல
என்னை மீறிச் சிங்கம் எங்கும் தப்பாது

விஜய் :
காற்றை நீ வெட்டிப் போட்டால்
கடலை நீ கட்டிப் போட்டால்
என்னை உன் கட்டுப்பாட்டில் நீ கொள்வாய்

ஹன்சிகா :
காற்றோ என் வேலைக்காரி
கடலோ என் நீச்சல் தொட்டி
மீன்கள் என் காலில் மெட்டி
இன்னும் சொல்வேன் ஏதும் செய்வேன்

சரணம் - 2:

சுதீப் :
ஏ ஆண்டான் அடிமை எல்லாம்
ஆண்டவன் இட்ட சட்டம்
மேலோர் கீழோர் எல்லாம் விதியின் உத்தரவு

விஜய் :
ஓ ஆண்டான் அடிமை எல்லாம்
சட்டம் அல்ல திட்டம்
இறைவன் பேரால் மனிதன் செய்த சச்சரவு

சுதீப் :
காட்டில் இது எங்கள் ஆட்சி
நீயோ ஒரு பட்டாம் பூச்சி
காட்டை உன் சிறகில் ஏற்றப் பார்க்காதே

விஜய் :
பூவில் சிறு தேனைக் கொள்ள
ஆட்சி அது தேவை இல்லை
வண்டு அது போதும் நண்பா
உண்மை சொன்னால் என்மேல் வம்பா?

பல்லவி

ஸ்ரீதேவி :
ஆண்மையுள்ள ராணி இவள்
ஆளவந்த ஞானி இவள்
ஆண்களோடு போட்டியிட்டுத் தோற்றதில்லை

வான் அணிந்த வெண்ணிலவும்
தேய்வதுண்டு சாய்வதுண்டு
நான் அணிந்த கிரீடம் என்றும் சாய்வதில்லை

இவள் சொன்னால்
அது வேதம்
கிடையாது
எதிர் வாதம்

என் தேகத் தங்கம்
தேய்வதில்லை
அதில் மூப்பும் இல்லை
மயிலின் இறகில்
நரையே இல்லை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.