சிம்பு, கெளதம் மேனனை அடுத்து கூல் சுரேஷூக்கும் கிஃப்ட் கொடுத்த ஐசரி கணேஷ்!

சமீபத்தில் வெளியான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அதனை கொண்டாடும் வகையில் சிம்புவுக்கு சொகுசு காரும் கௌதம் மேனனுக்கு இருசக்கர வாகனமும் பரிசு கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தற்போது கூல் சுரேஷூக்கும் கிப்ட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் இதுவரை 60 கோடிக்கு மேல் வசூல் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றியை அடுத்து சிம்புவுக்கு ஆடம்பர கார் ஒன்றை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசளித்தார். இந்த காரின் மதிப்பு ஒரு கோடி என்று கூறப்படுகிறது. அதேபோல் இயக்குனர் கவுதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தை பிரமாதமாக புரமோஷன் செய்தவர் கூல் சுரேஷ் என்று சிம்புவே பாராட்டினார் என்பதும், அது மட்டுமின்றி தனது அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தை புரமோஷன் செய்த கூல் சுரேஷூக்கு ஐபோன் ஒன்றை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசாக அளித்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 

More News

நானும் இளவரசி தான்.. அதிதி ஷங்கரின் புதிய போட்டோஷூட்!

நாளும் இளவரசி தான் என அதிதி ஷங்கர் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. 

'பத்து தல' படத்தின் சூப்பர் அப்டேட்.. சிம்பு ரசிகர்கள் செம குஷி!

 சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றுள்ளது என்றும் இந்தப் படம் ரூ.60 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

உடுமலை கெளசல்யாவின் சலூன் கடை.. சொந்த காசில் வந்து திறந்து வைத்த பிரபல நடிகை!

உடுமலைப்பேட்டை கௌசல்யா சலூன் கடையை திறந்து இருக்கும் நிலையில் அந்த கடையை திறப்பதற்காக தனது சொந்த செலவில் வந்து பிரபல நடிகை ஒருவர் திறந்து வைத்துள்ளார். 

தனுஷூக்கு ரூ.38 கோடி, சிவகார்த்திகேயனுக்கு ரூ.34 கோடி.. பரபரப்பு தகவல்!

தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்களை ஒரே ஓடிடி நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் தனுஷின் படத்திற்கு ரூ.38 கோடியும், சிவகார்த்திகேயன் படத்திற்கு ரூ.34 கோடியும் வழங்கி

ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' ரிலீஸ் தேதி மாற்றம்: புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'ருத்ரன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் பணிகள்