நாளை சம்பவம் உறுதி.. வெங்கட்பிரபுவின் அசத்தலான 'கோட்' அப்டேட் !


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படக்குழுவினர் ரஷ்யாவில் முக்கிய காட்சிகள் படமாக்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த ஷெட்யூல் உடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ‘கோட்’ படத்தின் தொழில்நுட்ப பணிகள் மற்றும் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என்றும் ஏற்கனவே செப்டம்பர் 5 என்று ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பே டீசர், டிரைலர் மற்றும் இசை வெளியீடு ஆகியவை திட்டமிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஒரு புதிய அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இயக்குனர் வெங்கட் பிரபு ’நாளை சம்பவம் உறுதி’ என்று பதிவு செய்துள்ளார். அது மட்டும் இன்றி அடுத்த சில நிமிடங்களில் ‘கோட்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா கல்பாத்தி சிங்கிள் பாடல் ரிலீஸ் என்றும் ’எல்லோரும் ரெடியா’ என்றும் அறிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை நிச்சயம் சிங்கிள் பாடல் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா விஜய்யின் படத்திற்காக கம்போஸ் செய்த பாடல் நாளை வெளியாக இருக்கும் நிலையில் அந்த பாடலை விஜய் பாடி இருப்பாரா என்பதை நாளை வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
Are you ready? #GoatFirstSingle #TheGreatestofAllTime 🤩♥️ @actorvijay sir @archanakalpathi @thisisysr @vp_offl @Ags_production pic.twitter.com/sezhKe4q6l
— Aishwarya Kalpathi (@aishkalpathi) April 13, 2024
Naalai sambavam urudhi 🔥 🔥
— venkat prabhu (@vp_offl) April 13, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments