'சென்னை 600028' மூன்றாம் பாகம் உண்டா? சிஎஸ்கே நிர்வாகிக்கு வெங்கட்பிரபு பதில்

வெங்கட் பிரபு இயக்கிய முதல் திரைப்படமான ‘சென்னை 600028’ என்ற படம் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து இளைஞர்களையும் கவர்ந்து என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து என்ன படம் 9 ஆண்டுகள் கழித்து ’சென்னை 28’ இரண்டாம் பாகம் என்ற பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி அதுவும் சூப்பர் ஹிட்டானது. இந்த இரண்டு படங்களை அடுத்து இந்த படத்தின் மூன்றாம் பாகம் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்திறன் பகுப்பாளர் லட்சுமி நாராயணன் அவர்கள் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ‘சென்னை 600028’ இரண்டாம் பாகம் படத்தை சமீபத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது என்றும் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மிக சிறப்பாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்த சில நிகழ்வுகளும் இந்த படத்தின் சில காட்சிகளில் இருந்தது என்று கூறிய அவர், இந்த படத்தின் மூன்றாம் பாகம் லாக்டவுனுக்கு பின் உருவாகும் வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் வெங்கட்பிரபு, ‘இதுவரை அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை என்றும் ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலை சரியாக அமைந்தால் கண்டிப்பாக மூன்றாம் பாகமும் எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் வெங்கட் பிரபு கூறியுள்ளார். இதனை அடுத்து ‘சென்னை 600028’ மூன்றாம் பாகத்தை விரைவில் இயக்குங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More News

வைரலாகும் ஆண்ட்ரியா-சித்தார்த் முத்தக்காட்சி வீடியோ

பிரபல நடிகை ஆண்ட்ரியா குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே.

ஒரு அப்பாவாக பெருமிதம் அடைகிறேன்: மகன் செயலால் நெகிழ்ச்சி அடைந்த அருண்விஜய்

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின்னர் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய், சமீபத்தில் 'மாபியா' என்ற படத்தில் நடித்தார்.

ஊரடங்கை தளர்த்த “R” மதிப்பு குறைவாக இருக்க வேண்டும்??? உலக நாடுகள் பின்னபற்றும் அளவீடு!!!

கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல் படுத்தின. சில நாடுகளில் கடுமையாகவும் சில நாடுகளில் மென்மையாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன

ஊரடங்கு முடிந்தபின் இதை வைத்து கொள்ளலாமே: அரசுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள்

தேர்வு என்பது மாணவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோர்களுக்கும் மன இறுக்கமானது என்றும் எனவே பத்தாம் வகுப்பு தேர்வை ஊரடங்கு முடிந்த் பின்னர் வைத்துக் கொள்ளலாமே

மரணமாஸ் 'மாஸ்டர்' டிரைலரை 6 முறை பார்த்தேன்: பிரபல நடிகர்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதியே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக தேதி