விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் வெங்கட்பிரபு

  • IndiaGlitz, [Tuesday,September 18 2018]

விஜய் நடித்த 'புலி' படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன், வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' என்ற படத்தை இயக்கி வந்தார். இந்த படம் ஒருசில பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நின்றுவிட்டது.

இந்த நிலையில் சிம்புதேவன் இயக்கவுள்ள புதிய படம் ஒன்றை பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் வெகுவிரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வெங்கட்பிரபு தற்போது 'பார்ட்டி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவர் தற்போது சிம்பு நடிக்கும் 'மாநாடு' என்ற படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இருப்பதிலேயே ரஜினிதான் பழைய முகம்: ரஞ்சித்துக்கு பிரபல நடிகர் விளக்கம்

ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் எஸ்.தாணு தயாரித்த 'கபாலி' படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் ராதாரவி நடிப்பதாக இருந்தது. இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி கூறியதாவது:

இணையத்தில் லீக் ஆன 'விஸ்வாசம்': அதிர்ச்சியில் படக்குழு

தல அஜித் 'விஸ்வாசம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உதயநிதியின் 'கண்ணே கலைமானே' சென்சார் தகவல்

உதயநிதி நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

ஐஸ்வர்யாவை டார்ச்சர் செய்யும் விஜி! வேடிக்கை பார்க்கும் யாஷிகா

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் அவர்களுடைய மன உறுதியை சோதனை செய்யும் டாஸ்க்காக அமைந்துள்ளது.

இரண்டாம் பாகமாக உருவாகும் பிரபுதேவாவின் சூப்பர் ஹிட் படம்

பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய சூப்பர் ஹிட் த்ரில் படமான 'தேவி' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில்