close
Choose your channels

உதயநிதியின் 'கண்ணே கலைமானே' சென்சார் தகவல்

Tuesday, September 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து மிக விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவில் உருவான இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.