'தளபதி 68' படத்தில் இந்த நடிகை நடிப்பது உறுதியா? வெங்கட்பிரபு வெளியிட்ட வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,September 10 2023]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தை இயக்கவிருக்கும் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் சினேகா இருப்பதை அடுத்து இந்த படத்தில் சினேகா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

‘தளபதி 68’ திரைப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கும் நிலையில் பிரியங்கா மோகன் ஒரு நாயகி என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது. இன்னொரு நாயகியாக நடிக்க ஜோதிகா, சிம்ரன், சினேகா ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சினேகாவுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ’தளபதி 68’ திரைப்படத்தில் சினேகா தான் நாயகி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இது உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட சில பிரபலங்களும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், யுவன்ஷங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகவுள்ளது.

More News

'கேப்டன் மில்லர்' படத்தின் முக்கிய பணிகள் தொடக்கம்.. ரிலீஸ் எப்போது?

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தனுஷ் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இருப்பினும் மற்ற காட்சிகளின்

இவருக்கு வயது 36 ஆ? இல்லை 16ஆ? தனுஷ் நாயகியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

தனுஷ் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் 'இவருக்கு வயது 36ஆ அல்லது 16ஆ

மூன்றே நாளில் இத்தனை கோடியா? 'ஜவான்' வசூலின் அதிகாரபூர்வமான தகவல்..!

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில், அனிருத் இசையில், உருவான 'ஜவான்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியான நிலையில் மூன்றே நாட்களில் இந்த படத்தின் வசூல் குறித்த தகவல்

இது இப்ப தேவையில்லாத ஆணி.. பாரத் குறித்த கேள்விக்கு பிரபல நடிகரின் பதில்..!

இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவது குறித்து கேட்ட கேள்விக்கு இது இப்போது தேவையில்லாத ஆணி என பிரபல நடிகர் ஒருவர் பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

'என்னோட அந்த சூப்பர் ஹிட் காமெடியை எழுதியது மாரிமுத்து தான்: வடிவேலு உருக்கம்..!

என்னுடைய சூப்பர் ஹிட் காமெடியை எழுதியது மறைந்த ஜி மாரிமுத்து அவர்கள் தான் என நடிகர் வடிவேலு உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.