close
Choose your channels

'வெண்ணிலா கபடி குழு' படத்தில் நடித்த இன்னொரு நடிகர் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

Saturday, December 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’வெண்ணிலா கபடிகுழு’ திரைப்படத்தில் நடித்த ஹரி வைரவன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் தற்போது அதே படத்தில் நடித்த இன்னொரு நடிகர் காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக கொண்டு உருவான திரைப்படம் ’வெண்ணிலா கபடிகுழு’ என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் காமெடி மற்றும் குணசித்திர வேடத்தில் நடித்தவர் மாயி சுந்தர். இந்த படத்தில் அறிமுகமாகி மாயி சுந்தர், அதன் பின்னர் விக்ரம் நடித்த ’ஸ்கெட்ச்’ விஷ்ணு விஷால் நடித்த ’குள்ளநரி கூட்டம்’ விஜய் நடித்த ’துள்ளாத மனமும் துள்ளும்’ உள்பட பல படங்களில் நடித்தவர் என்பதும் சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ’கட்டா குஸ்தி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாயி சுந்தர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.45 மணிக்கு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

’வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் நடித்த நடிகர்கள் இரண்டு பேர் அடுத்தடுத்து காலமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment