close
Choose your channels

வாரிசு பட ட்ரைலரில் இதை கவனித்தீர்களா?

Thursday, January 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த டிரைலர் வெளியாகி சில மணி நேரத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் ரசிகர்கள் இந்த டிரைலரில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் கொண்டாடி கொண்டிருந்தாலும் வழக்கம்போல் சிலர் வேண்டுமென்றே இந்த டிரைலருக்கு நெகட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த டிரைலரில் ஒரு சிலர் மட்டுமே கூர்ந்து கவனித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாக திரைப்படங்களில் மறைந்த பழம்பெரும் நட்சத்திரங்களின் புகைப்படங்களை பயன்படுத்துவது கடந்த சில வருடங்களாக வழக்கமாக இருந்துவருகிறது. அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தில் கூட மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது என்பதை பார்த்தோம்.

அந்த வகையில் தற்போது விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் மறைந்த முன்னாள் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஜெமினி கணேசனின் புகைப்படம் இந்த படத்தில் எந்த கேரக்டரில் வருகிறது என்பதை படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment