செளகார் ஜானகி பேத்தி வைஷ்ணவியின் மகளா இவர்? வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,March 25 2023]

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ள நிலையில் அவருடைய மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 1950 ஆம் ஆண்டில் இருந்து நடித்து வருபவர் நடிகை சௌகார் ஜானகி என்பதும் சமீபத்தில் ’பிஸ்கோத்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு இவரது கலை சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சௌகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி அரவிந்த் தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். குறிப்பாக இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’ஒரு வீடு இரு வாசல்’ என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

இந்த நிலையில் நடிகை வைஷ்ணவி கடந்த 1996 ஆம் ஆண்டு அரவிந்த் கமலநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அதிதி மற்றும் மேகனா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் வைஷ்ணவியின் மகள்கள் புகைப்படங்கள் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகிறது.

More News

க்யூட்டா பிறந்தநாள் கொண்டாடிய லாஸ்லியா… வைரலாகும் புகைப்படம்!

இளம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்ற லாஸ்லியா தனது பிறந்த நாளை தோழிகளுடன் கொண்டாடியுள்ளார்.

ஷங்கரின் உதவி இயக்குனருக்கு இப்படி ஒரு நிலையா? பிச்சை எடுக்கும் அவலம்..!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி உட்பட ஒரு சில இயக்குனர்கள் தற்போது திரையுலகின் உச்சத்தில் இருக்கும் நிலையில் அவரிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் உணவு,

'சிறுத்தை' படத்தில் நடித்த சிறுமியா இவர்? பிளஸ் 2 படிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

 சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் உருவான 'சிறுத்தை' என்ற திரைப்படம் கலந்த 2011 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் கார்த்தி மகளாக நடித்திருந்த குழந்தை

அசத்தலான லுக்கில் நடிகை சமந்தா… வைரலாகும் போட்டோ ஷுட் புகைப்படம்!

உடல்பாதிப்பில் இருந்து மீண்டுவந்த நடிகை சமந்தா தற்போது விறுவிறுப்பாகப் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

14 வயதில் மகள் இருக்கும்போது மீண்டும் அப்பாவான கின்னஸ் சாதனை நடிகர்.. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்..!

நகைச்சுவை நடிகர் பக்ருவுக்கு ஏற்கனவே 14 வயதில் மகள் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் அவர் அப்பாவாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.