10 தேசிய விருதுகள் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனர் காலமானார்: கமல்ஹாசன் இரங்கல்!

  • IndiaGlitz, [Friday,December 24 2021]

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களின் படங்களை இயக்கியவரும், பத்து முறை தேசிய விருது வாங்கியவருமான தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட இயக்குனரான சேதுமாதவன் அவர்கள் இன்று காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பால்மணம், கல்யாண ஊர்வலம், நாளை நமதே, நிஜங்கள், மறுபக்கம், நம்மவர் போன்ற தமிழ் படங்களையும், ஏராளமான மலையாள படங்களையும் இயக்கியவர் இயக்குனர் சேதுமாதவன். இவர் 10 தேசிய விருதுகள் வாங்கி உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி கேரள மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள், நந்தி விருதுகள் என பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர் சேதுமாதவன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. நடிகர் கமல்ஹாசனை மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இவர்தான் என்பதும் எம்ஜிஆர் நடித்த ’நாளை நமதே’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர் சேதுமாதவன் மறைவுக்கு தனது டுவிட்டரில் கமல்ஹாசன் பதிவு செய்திருப்பதாவது: காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்.

More News

நல்லவேளை, எனக்கு அன்பான குடும்பம் இருந்ததால் தப்பித்தேன்: எவிக்சனுக்கு பிறகு அபினய் பதிவு!

நல்லவேளை எனக்கு அன்பான குடும்பம் இருந்ததால் நான் தப்பித்தேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபினய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

எதிர்பார்த்தது போலவே தாமரைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்: நெகிழ்ச்சியான காட்சிகள்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் இதனால் இந்த வாரம் முழுவதும் சென்டிமெண்ட் கலந்த நெகிழ்ச்சியான காட்சிகளை பார்க்க முடிகிறது

சசிகுமாரின் 21வது படம்: டைட்டில் மற்றும் டீசர் ரிலீஸ்!

நடிகர் சசிகுமார் நடிக்கும் 21வது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை பார்த்தோம்.

'பீஸ்ட்' சிங்கிள் பாடலின் புரமோ வீடியோவில் இவர் இல்லையா? ரசிகர்கள் அதிருப்தி!

 தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோ சமீபத்தில் படமாக்கப்பட்டது. அந்த வீடியோவுடன் சிங்கிள் பாடல் வரும் ஜனவரி 1ஆம்

டி.இமானுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த பரிசு: வைரல் புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியான நிலையில் இந்த திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி நல்ல வசூலைப் பெற்றது