close
Choose your channels

'பீஸ்ட்' சிங்கிள் பாடலின் புரமோ வீடியோவில் இவர் இல்லையா? ரசிகர்கள் அதிருப்தி!

Thursday, December 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோ சமீபத்தில் படமாக்கப்பட்டது. அந்த வீடியோவுடன் சிங்கிள் பாடல் வரும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

மேலும் இந்த சிங்கிள் பாடலின் புரமோவில் தளபதி விஜய், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இந்த பாடலை எழுதிய நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி சமீபத்தில் படமாக்கப்பட்ட ’பீஸ்ட்’ படத்தின் சிங்கிள் பாடல் புரோமோ வீடியோவில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளவில்லை என்றும் விஜய், நெல்சன் மற்றும் அனிருத் ஆகிய மூவர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படம் 2022ஆம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.