பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டு கொலை: பெங்களூரில் பரபரப்பு

  • IndiaGlitz, [Wednesday,September 06 2017]

லங்கேஷ் பத்ரிகே என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக பணியாற்றி வந்த கவுரி நேற்று மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடலில் ஏழு குண்டுகள் பாய்ந்துள்ளதால் அவரது உயிர் பிரிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரபல ஆங்கில நாளேடான லங்கேஷ் பத்ரிகே என்ற பத்திரிகையில் வகுப்பு வாதம், மதவாதத்துக்கு எதிராகவும் குறிப்பாக இந்துத்துவாவை எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்த கவுரிக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. மேலும் அவர் மீது இந்துத்துவ அமைப்புகள் பல அவதூறு வழக்குகளை தொடர்ந்து அந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.

குஜராத் படுகொலைகள் குறித்த நூல் ஒன்றை கன்னடத்தில் மொழிபெயர்த்து கவுரி எழுதிய நூலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று கவுரி லங்கேஷ் அவரது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் கதவை தட்டியுள்ளனர். கதவை கவுரி திறந்தவுடனே அவர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட் மர்ம நபர்கள் பின்னர் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களுக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.

கவுரி லங்கேஷ் படுகொலைக்கு இந்தியா முழுவதிலும் உள்ள பிரபல எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

More News

1186 மார்க் எடுத்த மாணவரின் தந்தையை அடித்து நொறுக்கிய பாஜகவினர்

முன்பெல்லாம் குறைந்த மார்க் அல்லது தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே தற்கொலை செய்து கொள்வார்கள்...

சிறைக்கு வெளியே வந்தார் குண்டர் சட்டத்தின் குரல்வளையை நெறித்த வளர்மதி

கதிராமங்கலம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த சேலம் மாணவி வளர்மதிஉத்தரவிட்டது..

பாரதிராஜா தலைமையில் நடந்த 'களவாணி' நடிகரின் திருமணம்

விமல், ஓவியா நடித்த 'களவாணி' படத்தில் யதார்த்தமான வில்லனாக அறிமுகமான திருமுருகன்,

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவிய மாணவர்கள் போராட்டம்

அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தையே கொந்தளிக்க செய்துவிட்டதால் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் வலுவடைந்து வருகிறது.

வளர் பெளர்ணமி போல் வளர வளர்மதிக்கு வாழ்த்து. கமல்

கதிராமங்கலம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்ச்சி