close
Choose your channels

பாரதிராஜா தலைமையில் நடந்த 'களவாணி' நடிகரின் திருமணம்

Tuesday, September 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விமல், ஓவியா நடித்த 'களவாணி' படத்தில் யதார்த்தமான வில்லனாக அறிமுகமான திருமுருகன், அந்த படத்தில் கிடைத்த வரவேற்புக்கு பின்னர் அரவாண், என்னமோ நடக்குது, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், 49 ஓ, ஈட்டி, பென்சில், கட்டப்பாவ காணோம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் ஓணான், அடங்காதே, டார்ச்லைட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் திருமுருகனுக்கும் அவரது உறவுக்கார பெண் மோகனப்ரியாவுக்கும் நேற்று தஞ்சை அருகில் உள்ள பாப்பாநாடு என்ற கிராமத்தில் திருமணம் நடந்தது. மணமகள் மோகனப்ரியா, வருவாய் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார்.  

இயக்குனர் இமயம் பாரதிராஜா இந்த திருமணத்திற்கு தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார்.  திருமண.விழாவில்  இயக்குநர் சற்குணம் நடிகர் விமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.