பிரபல இசையமைப்பாளர் காலமானார்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவர்!

  • IndiaGlitz, [Monday,April 06 2020]

இசையப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதல்முறையாக வாய்ப்பு கொடுத்த பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன் அவர்கள் காலமானார். அவருக்கு வயது 85.

1968ஆம் ஆண்டு இசையமைப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கிய அர்ஜுனன், சுமார் 200 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார். கே.ஜே. யேசுதாஸ் உள்ளிட்ட பல பாடகர்கள் இவரது இசையமைப்பில்தான் முதன்முதலில் பாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1981ஆம் ஆண்டு அர்ஜுனன் தான் இசையமைத்த ’அடிமச்சங்கலா’ (Adimachangala) என்கிற மலையாளப் படத்தில் முதல்முதலாக கீ போர்டு வாசிக்க ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு வாய்ப்பு அளித்தார். தனக்கு முதல்முறையாக வாய்ப்பு அளித்தவர் என்பதால் அர்ஜுனன் மீது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எப்போதும் அன்பு கலந்த மரியாதை உண்டு.

ஏராளமான மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அர்ஜூனன், கடந்த 2017ஆம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை கேரள அரசிடமிருந்து பெற்றார். மேலும் அர்ஜுனனின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

15 வருடங்கள் கழித்தும் பாராட்டை பெற்ற விஜய் படம்: இயக்குனர் பேரரசு நெகிழ்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகில் உள்ள அனைத்து தொழில்களும் முடங்கிவிட்டாலும், முன்பை விட அதிக லாபம் தரும் ஒரே தொழிலாக ஊடகங்கள் உள்ளன

கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பிய பிரபல பாடகி

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் சமீபத்தில் லண்டனில் இருந்து திரும்பி வந்த போது விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையில் இருந்து தப்பி, வீட்டிற்கு சென்றதாகவும்

விலங்குகளுக்கு கொரோனா வைரஸ்!!! இதுவரை சொல்லப்பட்ட ஆய்வு முடிவுகள்???

அமெரிக்காவின் நியூயார்கள் நகரில் உள்ள பிராங்க்ஸ் மிருகக்காட்சி சாலையில் ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

'திருட்டுப்பயலே' இயக்குனரின் மெகா பட்ஜெட் படம் குறித்த தகவல்!

'திருட்டுப் பயலே' மற்றும் 'திருட்டுப் பயலே 2' உள்பட ஒரு சில வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சுசி கணேசன் தற்போது 'திருட்டுப்பயலே 2' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்

கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட பிரிட்டன் பிரதமர்!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னரே கொரோனா பாதிப்பு இருப்பது