சிவாஜி, ரஜினி பட தயாரிப்பாளர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Tuesday,January 11 2022]

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் எம் முத்துராமன் அவர்கள் சற்று முன் காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நவரச நாயகன் கார்த்திக் நடித்த ’ராஜமரியாதை’ ரஜினிகாந்த், லதா நடித்த ’ஆயிரம் ஜென்மங்கள்’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் எம். முத்துராமன். இவர் தயாரித்த ’ஒரு வீடு ஒரு மனிதன்’ என்ற படம் சிறந்த படத்திற்கான தமிழக அரசு விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் எம். முத்துராமன் அவர்கள் சற்று முன் சிகிச்சை பலனின்றி காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். பழம்பெரும் தயாரிப்பாளர் எம் முத்துராமன் அவர்களின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சித்தார்த்தின் சர்ச்சை டுவிட்டிற்கு சாய்னா நேவால் கணவரின் நாகரீகமான பதிவு!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் பதிவு செய்தல் சித்தார்த்திற்கு சாய்னா நேவால் கணவர் நாகரீகமாக பதில் அளித்துள்ளார்.

ஷெரினை அடுத்து 2வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் நடிகை!

நடிகையும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான ஷெரின் சமீபத்தில் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதை அவர் தனது சமூக வலைத்தளத்தில்

'பிகில்' நடிகைக்கு திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'பிகில்' உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகைக்கு திருமணம் ஆனதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த யுத்தத்தில் நான் தனியாள் இல்லை: பாலியல் வழக்கு குறித்து நடிகையின் பதிவு!

நடிகை பாவனா மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் 'இந்த யுத்தத்தில் நான் தனியாள் இல்லை' என நடிகை பாவனா

2022 கோல்டன் குளோப்ஸ் விருது பெற்ற பிரபலங்கள்!

ஆஸ்கருக்கு அடுத்தப்படியாக உலக அளவில் மதிக்கப்படும் விருதுகளுள்