நீண்ட இடைவெளிக்கு விஜய்சேதுபதி படத்தில் ரீஎண்ட்ரி ஆகும் பிரபலம்.. வைரல் புகைப்படம்!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்சேதுபதி படத்தில் பாடல் ஒன்றை பிரபல பாடகர் ஒருவர் பாடி உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகர்களில் ஒருவர் உதித் நாராயணன் என்பதும் இவர் கடந்த 1980ம் ஆண்டு முதல் பல திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் ’டிஎஸ்பி’ என்ற திரைப்படத்திற்காக ஒரு பாடலை உதித் நாராயணன் பாடியுள்ளார். இந்த பாடலை உதித் நாராயணன் உடன் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இசையமைப்பாளர் டி இமான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். உதித் நாராயணன் அவர்களுடன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அறிமுக பாடலாசிரியர் விஜய் முத்துப்பாண்டி பாடல் வரிகளில் உருவான இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாக உள்ளது.

விஜய்சேதுபதி, அனு கீர்த்திதாஸ் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார் என்பதும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

More News

இறுக்கி அணைச்சு கட்டிப்பிடித்த நயன் - விக்கி: லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இறுக்கி அணைத்து கட்டிப்பிடிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

மாஸ் என்ட்ரி கொடுப்பேன். ப்ரியாவின் கடைசி பதிவை பார்த்து கண்ணீரில் நனையும் தோழிகள்!

சென்னையை சேர்ந்த 17 வயது கால்பந்து வீராங்கனை ப்ரியாவுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்த போது தவறான சிகிச்சை காரணமாக மரணமடைந்தார் என்றும், அதனை அடுத்து தமிழக அரசு அதிரடி

பிக்பாஸ் வீட்டில் ஷிவினின் இரண்டாவது காதல்? இந்த சீசனின் அமீர்-பாவனியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவின் சக போட்டியாளர் ஒருவரை காதலிப்பதை மறைமுகமாக கூறியுள்ள நிலையில் இந்த சீசனின் அமீர் - பாவனி உருவாக்கிவிட்டார்களா? என்ற

கடைசி படம் மிகப்பெரிய தோல்வி.. நடிப்பதையே நிறுத்தி கொண்ட பிரபல நடிகர்?

பிரபல நடிகரின் நடிப்பில் உருவான திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வி அடைந்ததை அடுத்து சில ஆண்டுகளுக்கு நடிப்பதையே அவர் நிறுத்திக் கொள்ளும் முடிவை

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 3 திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகி உள்ள நிலையில் மேலும் ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.