பழம்பெரும் இயக்குனர் தாசரி நாராயண ராவ் மறைவு: கமல், ரஜினி இரங்கல்

  • IndiaGlitz, [Wednesday,May 31 2017]

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, நடிகர் தாசரி நாராயணராவ் நேற்றிரவு 7 மணிக்கு காலமானார். அவரது மறைவு தெலுங்கு திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மறைந்த இயக்குனருக்கு சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் படப்பிடிப்புகள் மற்றும் அனைத்து பணிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தெலுங்கு பிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மறைந்த இயக்குனர் தாசரி நாராயண ராவ் அவர்களின் மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர், நடிகர்களில் ஒருவர் தாசரி நாரயண ராவ். அவரது இழப்பு இந்திய சினிமாவிற்கு ஈடுஇணை செய்ய முடியாதது. தாசரி நாரயண ராவ் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில், 'தாசரி நாராயண ராவ் மறைவு தெலுங்கு சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இயக்குநர் கே.பாலச்சந்தர் பார்த்து வியந்தவர் தாசரி நாராயணராவ் என்றும் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

I remember the days spent with Narayan rao gaaru and Mr. Sanjeev kumar ji. Yaadgaar. He was a great fan of Mr.KB. I belong to a great family

— Kamal Haasan (@ikamalhaasan) May 30, 2017

#RIP #DasariNarayanaRao ji pic.twitter.com/RHwRcgfLsl

— Rajinikanth (@superstarrajini) May 30, 2017

More News

ஜெயலலிதா, சசிகலா சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நால்வரும் குற்றவாளிகள் என்ற தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

திராவிட நாட்டிற்கு 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா' என்று பெயர் வைத்த நெட்டிசன்கள்

மத்திய அரசு அறிவித்த மாட்டிறைச்சி தடை சட்டத்தால் மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட போகிறதோ தெரியாது.

பிரதமர் மோடியை தற்செயலாக ஜெர்மனியில் சந்தித்த பிரபல நடிகை

பாரத பிரதமர் நரேந்திரமோடி நான்கு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு நேற்று கிளம்பினார். இன்று காலை ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரை அடைந்த அவர் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கில் உள்பட பல தலைவர்களை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை செய்கிறார்...

'காலா கரிகாலன்' படத்தலைப்பு. சென்னை கமிஷனர் ஆபீசில் புகார்

ரஜினிகாந்த் உள்பட பெரிய நடிகர்கள் படம் என்றாலே வழக்குகளை சந்திக்காமல் வெளிவந்ததில்லை என்பது கோலிவுட்டின் எழுதப்படாத வரலாறு. கதை, டைட்டில் உள்பட பல பிரச்சனைகள் படம் ஆரம்பித்தது முதல் ரிலீசுக்கு முந்தைய நாள் வரை வந்து கொண்டே இருக்கும்...

'காலா' கரிகாலனின் பேரன் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு இன்று மூன்றாவது நாளாக மும்பையில் நடைபெற்று வருகிறது...