close
Choose your channels

மீண்டும் பள்ளிக்கு போகலாமா? வெற்றிமாறன் - விமல் இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

Thursday, April 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் தயாரிக்கும் திரைப்படத்தில் விமல் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் நிலையில் அவர் தயாரிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் விமல் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை நடிகர் போஸ் வெங்கட் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே ’கன்னி மாடம்’ என்ற படத்தை இயக்கிய போஸ் வெங்கட் தனது இரண்டாவது படத்திற்கு ’மபொசி’ என்ற டைட்டில் வைத்திருந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த போஸ்டரில் நடிகர் விமல் ஒரு ஆசிரியராக நடிக்க இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. அவர் சாக்பீசில் போர்டில் சில எழுத்துக்களை எழுதுவதில் இருந்து அதை யூகிக்க முடிகிறது. மேலும் பின்னணியில் பாரதியார், திருவள்ளுவர் படங்கள் இருப்பதை அடுத்து இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியதோடு, நம்முடைய பள்ளி நினைவுகளை இந்த படம் கொண்டு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்து குமார் இசையில், இனியன் ஹாரிஸ் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பில் உருவாக இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 'மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்பதன் சுருக்கம்தான் ’மபொசி’ என்பதும் இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.