close
Choose your channels

வெற்றிமாறனின் அடுத்த பட நாயகி அறிவிப்பு

Sunday, September 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'வடசென்னை' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் வெற்றிமாறன் தயாரிக்கும் ஒரு படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

ஜீவா, நயன்தாரா நடித்த 'திருநாள்' படத்தின் இயக்குனர் ராம்நாத் இயக்கும் இந்த படத்தில் மனிஷா யாதவ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். 'வழக்கு எண் 14/9' படத்தில் அறிமுகமாகிய மனிஷா யாதவ், சமீபத்தில் நடித்த 'ஒரு குப்பை கதை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கிராமத்து பெண் வேடத்தில் வித்தியாசமான தோற்றத்தில் மனிஷா யாதவ் நடிக்கவுள்ள இந்த படம் ஒரு த்ரில் படம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் முதல் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும், இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பும் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

மனிஷா யாதவ் தற்போது 'சண்டமுனி' என்ற திகில் காமெடி படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தை மில்கா செல்வகுமார் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment