ஒரே படத்தில் வெற்றிமாறன், பா ரஞ்சித் மற்றும் வெங்கட்பிரபு: டிசம்பர் 5ல் டீசர்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான வெற்றிமாறன், பா ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய மூவரும் ஒரே படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

’தமிழ் படம்’ மற்றும் ’தமிழ் படம் 2’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அமுதன் தற்போது ’ரத்தம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, மற்றும் மகிமா நம்பியார் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு, கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் இந்த படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் வெங்கட் பிரபு மற்றும் பா ரஞ்சித் ஆகிய மூவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளனர்.

இந்த சிறப்பு தோற்றத்துடன் கூடிய டீஸர் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே படத்தில் மூன்று பிரபல இயக்குனர்கள் காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

More News

கதை மட்டுமே படத்தை வெற்றி பெற செய்யும்.. 'வாரிசு', 'துணிவு' குறித்து விஷ்ணுவிஷால்!

விஷ்ணு விஷால் நடித்த 'கட்டா குஸ்தி' என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

யாரைடா சிம்ப்ளி வேஸ்ட்டுன்னு சொல்றிங்கடா டேய்.... மைனா ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்பதும் இந்த முறை வித்தியாசமாக 24 மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்று தெரிந்ததே.

'தளபதி 67' படத்தில் கார்த்திக் நடிக்க மறுத்தது ஏன்? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 67' படத்தில் பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை பார்த்தோம். குறிப்பாக பாலிவுட் பிரபல நடிகர் சஞ்சய் தத்,

நீ ஒரு அட்டைக்கத்தி, ஸ்ட்ராங் பிளேயர் எல்லாம் இல்லை.. வறுத்தெடுத்த விக்ரமன்!

நீங்கள் ஒரு அட்டைக்கத்தி போட்டியாளர் என்றும் ஸ்ட்ராங்கான போட்டியாளர் இல்லை என்றும் நேருக்கு நேராக விக்ரமன் ஆவேசமாக கூறும் வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ளது.

பூஜா ஹெக்டேவின் அடுத்த பட டிரைலர்.. செம கலர்புல் என ரசிகர்கள் பாராட்டு!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே தளபதி விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்து இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பூஜா ஹெக்டே நடித்த பாலிவுட்