close
Choose your channels

ஒரே படத்தில் வெற்றிமாறன், பா ரஞ்சித் மற்றும் வெங்கட்பிரபு: டிசம்பர் 5ல் டீசர்

Friday, December 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான வெற்றிமாறன், பா ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய மூவரும் ஒரே படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

’தமிழ் படம்’ மற்றும் ’தமிழ் படம் 2’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அமுதன் தற்போது ’ரத்தம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, மற்றும் மகிமா நம்பியார் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு, கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் இந்த படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் வெங்கட் பிரபு மற்றும் பா ரஞ்சித் ஆகிய மூவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளனர்.

இந்த சிறப்பு தோற்றத்துடன் கூடிய டீஸர் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே படத்தில் மூன்று பிரபல இயக்குனர்கள் காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment