'வடசென்னை 2' எப்போது? இயக்குனர் வெற்றிமாறன் தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,March 09 2023]

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’வடசென்னை’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த தனுஷின் ’வாத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் ’வடசென்னை 2’ படம் குறித்து கோரிக்கை விடுத்தபோது ’வடசென்னை 2’ திரைப்படம் கண்டிப்பாக உருவாகும் என்றும் இதற்கு வெற்றிமாறன் தான் மனது வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த நிலையில் அதில் பேசிய வெற்றிமாறன் ’விடுதலை’ பாகம் ஒன்று மற்றும் இரண்டு பணிகள் முடிந்ததும் ’வாடிவாசல்’ படத்தை தொடங்குவேன் என்றும் தெரிவித்தார். ’வாடிவாசல்’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு ’வடசென்னை 2’ படத்திற்கான வேலைகள் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து அனேகமாக அடுத்த ஆண்டு இறுதியில் 'வடசென்னை 2’ படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் உடன் மீண்டும் வெற்றிமாறன் இணையும் 'வடசென்னை 2' திரைப்படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

 இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள்: 'விடுதலை' குறித்து இசைஞானி இளையராஜா..!

'விடுதலை' படத்தில் இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள் என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். 

இதுவரைக்கும் நடக்காத டெர்ரர் அட்டாக்.. வெற்றிமாறனின் 'விடுதலை' டிரைலர்..!

 வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி உள்ள 'விடுதலை' திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லரை பார்க்கும் போது ரசிகர்கள் பிரமிப்பு

கமல்ஹாசன் - சிம்பு இணையும் முதல் படம்.. செம வீடியோ ரிலீஸ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஒரே படத்தில் இணையும் அறிவிப்பு நாளை மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என செய்திகள் வெளியாகி உள்ளன. 

ஹன்சிகாவின் அடுத்த படம்.. பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் ஹீரோ: மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

ஹன்சிகாவின் அடுத்த திரைப்படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் நாயகனாக நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

முதல்முறையாக வெளியூருக்கு இரட்டை குழந்தைகளை அழைத்து சென்ற நயன்தாரா.. வைரல் புகைப்படங்கள்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் முறையாக தனது இரட்டை குழந்தைகளை வெளியூருக்கு அழைத்துச் சென்ற நிலையில் விமான நிலையத்தில் குழந்தையுடன் நயன்தாராவை புகைப்படம்