close
Choose your channels

கமல்ஹாசன் - சிம்பு இணையும் முதல் படம்.. செம வீடியோ ரிலீஸ்..!

Wednesday, March 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஒரே படத்தில் இணையும் அறிவிப்பு நாளை மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என செய்திகள் வெளியாகி உள்ளன.

சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தை ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் செம வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் BLOODandBATTLE என்ற கேப்ஷனுடன் தங்கள் நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படம் சிம்பு மற்றும் தேசிங்கு ராஜா இணையும் படம் தான் என்று ரசிகர்கள் தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிம்புவின் 48வது பட அறிவிப்பை அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.