close
Choose your channels

பணப்பெட்டியை எடுத்த பூர்ணிமாவை விட விசித்ராவுக்கு அதிக சம்பளமா? எத்தனை லட்சம் தெரியுமா?

Sunday, January 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னருக்கு அடுத்தபடியாக பூர்ணிமாவுக்கு தான் அதிகப்படியான பணம் கிடைத்ததாகவும் அவருக்கு சம்பளமாக 14 லட்சம் பண பெட்டி மூலம் 16 லட்சம் என மொத்தம் 30 லட்ச ரூபாய் கிடைத்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் விசித்ராவுக்கு பூர்ணிமாவை விட அதிக சம்பளம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அதிக சம்பளம் பெறும் போட்டியாளர்களில் ஒருவர் விசித்ரா என்றும் அவருக்கு தினமும் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது

அந்த வகையில் அவர் 95 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததால் அவருக்கு 35 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது. பூர்ணிமாவுக்கு பணப்பெட்டியில் கிடைத்த தொகையுடன் சேர்த்து 30 லட்சம் மட்டுமே கிடைத்த நிலையில் பணப்பெட்டி இல்லாமல் விசித்ராவுக்கு கூடுதலாக 5 லட்ச ரூபாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை விசித்ரா பணப்பெட்டியை எடுத்திருந்தால் கிட்டத்தட்ட டைட்டில் வின்னருக்கு இணையாக அவருக்கு சம்பளம் கிடைத்திருக்கும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.