close
Choose your channels

விக்னேஷ் சிவன் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Sunday, March 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர் என்பதும் இந்த நிறுவனம் சார்பில் ’பெபிள்ஸ்’ ‘நெற்றிக்கண்’ ’காத்துவாக்குல இரண்டு காதல்’ ‘கனெக்ட்’ உட்பட ஒரு சில திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக ஒரு குஜராத்தி மொழி திரைப்படத்தை தயாரித்துள்ளது. ’சுப் யாத்ரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மல்ஹார் தாக்கூர் மற்றும் மோனல் கஜார் நடித்துள்ளனர். இதில் மோனல் கஜ்ஜார் ஏற்கனவே தமிழில் ‘சிகரம் தொடு’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது பெற்ற மனிஷ் சயினி என்பவரின் இயக்கத்தில் உருவாகியிருந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

மேலும் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் கவின் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.