'காத்துவாக்குல ரெண்டு காதல்' ரிலீஸ் நாளில் விக்னேஷ் - நயன் எங்கே சென்றார்கள் தெரியுமா?

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய நிலையில் முதல் காட்சி முடிவடைந்த நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்திற்கு குவிந்து வருவதை பார்க்கும்போது இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ரிலீஸ் நாளில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் திருப்பதி சென்றுள்ளது தெரிய வருகிறது. இது குறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருப்பதியிலிருந்து நயன்தாராவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் ’இன்று முதல் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் உங்களுக்காக’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெற்றிபெற வேண்டுமென திருப்பதிக்கு சென்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பிரார்த்தனை செய்துள்ளதாக தெரிகிறது.

More News

'வெந்து தணிந்தது காடு' படத்தின் சூப்பர் அப்டேட்: சிம்பு ரசிகர்கள் உற்சாகம்!

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக இயக்குனர்

ஆடியோ லாஞ்சுக்கு பிள்ளையார் சுழி போட்ட எம்ஜிஆர்: எந்த ஹீரோ படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஆடியோ லான்ச் என்ற டிரெண்டை தொடங்கி வைத்த பிரபல நடிகர் குறித்த தகவல்கள் தற்போது பார்ப்போம் 

வெற்றி விழா மேடையில் இயக்குனருக்கு அடுத்த பட அட்வான்ஸ் கொடுத்த தாணு!

அறிமுக இயக்குனர் இயக்கிய திரைப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடிய போது அந்த வெற்றி விழா மேடையிலேயே இயக்குநரின் அடுத்தப் படத்திற்கான அட்வான்சை கலைப்புலி எஸ் தாணு கொடுத்துள்ளார்.

விஜய் படத்தில் இணையும் 'கேஜிஎஃப் 2' பிரபலம்: இதைத்தான் எதிர்பார்த்தோம்!

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் 'கேஜிஎப் 2' படத்தில் நடித்த பிரபல நடிகர் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து 'இதைத்தான் எதிர்பார்த்தோம்' என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கில் ரீமேக் ஆகிறதா விஜய்யின் சூப்பர்ஹிட் படம்?

தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.