close
Choose your channels

'வெந்து தணிந்தது காடு' படத்தின் சூப்பர் அப்டேட்: சிம்பு ரசிகர்கள் உற்சாகம்!

Wednesday, April 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக இயக்குனர் கவுதம் மேனன் அதிகாரபூர்வமாக அறிவித்தார் .

இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் அப்டேட் ஒன்றை சற்று முன்னர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி 'வெந்து தணிந்தது காடு’ படத்தின் சிங்கிள் பாடல் மே 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சிம்பு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் பாடலை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.