இப்படி ஒரு பிறந்த நாளை நான் பார்த்ததே இல்லை. விக்னேஷ் சிவனை அசர வைத்த நயன்தாரா!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், இன்றைய பிறந்த நாளில் விக்னேஷ் சிவனை அவருடைய மனைவி நயன்தாரா அசரவைத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான விக்னேஷ் சிவன், விரைவில் அஜித் நடிக்கவிருக்கும் ’ஏகே 62’ என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரை துபாய்க்கு அழைத்துச் சென்ற நயன்தாரா, அங்கு பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

துபாயில் உள்ள புர்ஜ் காலிபா என்ற உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தின் முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் பதிவு செய்து பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து கூறியதாவது: ஒரு அன்பான குடும்பத்தின் தூய்மையான அன்பினால் நிரப்பப்பட்ட பிறந்த நாளாக எனக்கு இன்று அமைந்துள்ளது. என் தங்கமான மனைவியின் அற்புதமான ஆச்சரியம், பூர்ஜ் கஃலிபாவுக்கு கீழே என் அன்பான குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடினேன். இதைவிட சிறப்பாக வேறு பிறந்தநாள் கொண்டாட முடியாது.

ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் எனக்கு இறைவன் கொடுத்த அனைத்து அழகான தருணங்களுக்காக நான் எப்போதும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவும் நயன்தாரா மற்றும் அவருடைய குடும்பத்தினரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன.

More News

ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசு: 'கப்ஜா' பட டீசர் வெளியீடு!

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

வினய் ராய் நடிப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படம்: டைட்டில் அறிவிப்பு!

நடிகர் வினய் ராய் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்திற்கு 'மர்டர் லைவ்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

மீண்டும் ரீஎண்ட்ரி ஆகும் மக்கள் நாயகன் ராமராஜன்.. அசத்தலான டைட்டில் அறிவிப்பு!

கடந்த 80 மற்றும் 90களில் பல வெற்றி படங்களில் நடித்த மக்கள் நாயகன் ராமராஜன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி ஆகிறார். அவர் நடிக்கயிருக்கும் திரைப்படத்தின் டைட்டில்

சரக்கடித்து பார்ட்டியில் செம டான்ஸ் ஆடும் ராஷ்மிகா மந்தனா: வீடியோ வைரல்

நடிகை ராஷ்மிகா சரக்கு அடித்துவிட்டு பார்ட்டியில் கவர்ச்சி உடையுடன் செம டான்ஸ் ஆடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'கெட்ட போலீஸ் சார் நான்': பிக்பாஸ் பிரபலத்தின் செம வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான வனிதா போலீஸ் கேரக்டரில் ஒரு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் ஸ்டில்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.