close
Choose your channels

விக்னேஷ் சிவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல தோனி.. க்யூட் வீடியோ..!

Wednesday, July 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல தோனி சமீபத்தில் சென்னைக்கு அவர் தயாரித்த ’எல்ஜிஎம்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார் என்பதும் அந்த விழா சிறப்பாக நடைபெற்றது என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் சென்னைக்கு தல தோனி வந்திருந்த போது அவரை இயக்குனர் விக்னேஷ் சந்தித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன் ’என்னுடைய கேப்டன், என்னுடைய ரோல் மாடல், இந்த தூய மனிதனுக்கு அருகில் இருப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மிகவும் நேசிக்கும் ஒரு மனிதன் என்றால் அது தல தோனி தான். அவரை பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் முகத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அவர் தமிழ் திரையுலகில் படம் எடுப்பதை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த துறையை அவர் தேர்ந்தெடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்கள். அவர் தயாரிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி பெற எங்கள் அன்பையும் ஆதரவையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விக்னேஷ் சிவன் அணிந்திருந்த டீசர்ட்டில் தல தோனி ஆட்டோகிராப் போட்டார் என்பதும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.