முதல்முறையாக மகன்கள் குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்.. என்ன சொன்னார் தெரியுமா?

இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவர் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தந்தை அனுபவம் குறித்து அவர் மனம் திறந்து அளித்த பேட்டியில் தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்த நிலையில் நான்கு மாதம் கழித்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக அறிவித்தனர்., இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சர்ச்சை ஒருவழியாக தகுந்த ஆதாரங்களுடன் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன்னுடைய இரட்டை குழந்தைகள் குறித்து மனம் திறந்து ஊடகமொன்றுக்கு விக்னேஷ் சிவன் பேட்டி அளித்துள்ளார். அதில் இரண்டு மகன்களுக்கு தந்தை என்பதை தன்னால் இன்னும் நம்பவே முடியவில்லை என்றும் ஒரு தனி உலகத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனது குழந்தைகளுடன் நீண்ட நேரம் செலவழிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தனது வாழ்வின் மிகப்பெரிய அதிர்ஷ்டங்களில் ஒன்றுதான் குழந்தைகள் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் தனது மனைவி நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போது முதல் முறையாக தங்கள் குடும்பம் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஆக இருக்கிறது என்றும் நயன்தாரா ஒரு நல்ல தாய் என்றும் அவர் வாழ்க்கையில் திருப்தியுடனும் சந்தோஷத்துடனும் இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் ‘ஏகே 62’ என்ற படத்தை இயக்க உள்ளார் என்பதும் அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நயன்தாரா தற்போது நடித்து ஷாருக்கானின் ‘ஜவான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் வேறு சில படங்களிலும் நடிக்க கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மலர் தூவி வரவேற்ற பிக்பாஸ் ராம் குடும்பத்தினர்.. வீடியோ வைரல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகிய ராம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட நிலையில் அவருடைய குடும்பத்தினர் அவரை மலர் தூவி வரவேற்கும் காட்சியின் வீடியோ

'ஈரம்' அறிவழகனின் அடுத்த படம்.. அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

ஆதி நடித்த 'ஈரம்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

அமைச்சர் உதயநிதிக்கு கமல், ரஜினி வாழ்த்து.. விஷாலின் வேண்டுகோள் என்ன தெரியுமா?

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர்

அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி.. முதல் கையெழுத்து என்ன தெரியுமா?

தமிழக அமைச்சராக முதலமைச்சர் முக ஸ்டாலின் மகனும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு

10 வயது குழந்தைக்கு உரிய பொது அறிவு கூட இல்லையா? வெறுத்துப்போன பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 66வது நாளாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ குறித்து அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்