close
Choose your channels

'ஏகே 62' படத்தில் இருந்து விலகியதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்தாரா விக்னேஷ் சிவன்?

Sunday, March 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்கவுள்ள ‘ஏகே 62’ என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித், மகிழ்திருமேனி இணையும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரிரு நாளில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’ஏகே 62’ படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன் அவ்வப்போது தத்துவ மழைகளை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் பதிவு செய்திருப்பதாவது: என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி !!! வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும் , வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது!

இந்த பதிவில் இருந்து அஜித் படத்திலிருந்து விலகியதால் தனக்கு நேரம் கொடுத்த பிரபஞ்சத்துக்கு நன்றி என்று தெரிவித்துள்ளதாகவும் அஜித் படத்தில் இருந்து விலகிய அவமானம், தோல்வி பல அனுபவங்களை கற்றுக் கொடுத்திருகின்றது என்பதை மறைமுகமாக விக்னேஷ் சிவன் தெரிவித்திருப்பதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தனது 6வது திரைப்பட த்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பதிவில் அவர் தனது மகனை முத்தமிடும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment