விஜய் 59' படம் குறித்த முக்கிய தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,October 06 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு ஒருசில ஊடகங்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த போதிலும், சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் ஜெயம் ரவி, ஜீவா வரை பல திரையுலகினர் விஜய்யின் புதிய முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் நடித்து வரும் அடுத்த படமான 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'விஜய் 59' திரைப்படம் போலீஸ் பின்னணியில் அமைந்த ஒரு சீரியஸான படமான இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படத்தில் எந்த அளவு சீரியஸான காட்சிகள் இருக்கின்றதோ, அதே அளவுக்கு நகைச்சுவை காட்சிகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் விஜய்யின் டிரைவாக 'நான் கடவுள்' ராஜேந்திரன் நடித்து வருவதும் அவருக்கு நகைச்சுவை காட்சிகள் அதிகம் இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் 'லொள்ளுசபா' சுவாமிநாதன் இணைந்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி இந்த படத்தில் சந்தானமும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆக்சன் மற்றும் நகைச்சுவை காட்சிகள் சம அளவில் கலந்து உருவாக்கப்படுவதாக கூறப்படும் இந்த படத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இந்த படத்தை 'ராஜா ராணி' இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார்.

More News

தலைவர்-தல படங்களின் ஒற்றுமைகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்திற்கும் தல அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்திற்கும் தற்செயலாக ஒருசில ஒற்றுமைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது...

கிரிக்கெட் கடவுளை சந்தித்த கிரிக்கெட் இயக்குனர்

சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக தொடங்கிய ISL என்று கூறப்படும் இந்தியன் கால்பந்து லீக் போட்டியின் தொடக்க விழாவில் ...

பரத்-பிரேம்ஜி படத்தில் த்ரிஷா?

பரத்-பிரேம்ஜி முக்கிய வேடங்களில் நடிக்கும் 'சிம்பா' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதை ஏற்கனவே பார்த்துள்ளோம்...

தமிழில் மட்டும் தாமதம் ஆகும் அனுஷ்கா படம்

சமீபத்தில் வெளியான 'பாகுபலி'க்கு இணையான படம் என கூறப்படும் அனுஷ்காவின் 'ருத்ரம்மாதேவி' திரைப்படம்...

நன்றி மறந்த கமல் முன்மொழியும் தலைவர் நமக்கு தேவையா? சரத்குமார்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் தேதி நெருங்கி வருவதால் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தங்கள் அணியின் வெற்றிக்காக தீவிரமாக ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றனர்......