'விஜய் 60' படத்தின் நாயகி மற்றும் இயக்குனர் யார்?

  • IndiaGlitz, [Sunday,October 04 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கும் நிலையில் அட்லி இயக்கத்தில் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்யின் 60வது படத்தின் தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.

'விஜய் 60' படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார் என்பதை அனைவரும் அறிந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் நாயகி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக எமிஜாக்சன் அல்லது நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா ஏற்கனவே விஜய்யுடன் 'வில்லு' படத்தில் நாயகியாகவும், சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ஏ.எம்.ரத்னம், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் கடந்த 2000ஆம் ஆண்டு இணைந்த 'குஷி' சூப்பர் ஹிட் ஆகியது போல் மீண்டும் ரொமான்ஸ் மற்றும் காமெடியுடன் கூடிய சூப்பர் ஹிட் படத்தை உருவாக்க இந்த மும்மூர்த்திகள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

More News

I am back . அட்டகாசமாக ஆரம்பிக்கும் 'வேதாளம்' டீசர்? புதிய தகவல்

அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் டீசர் கடந்த வாரமே வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது வரும் 8ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 12 மணிக்கு ...

'காளி'தான் கபாலியின் இன்ஸ்பிரஷன். இயக்குனர் ரஞ்சித்

அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய இரண்டே படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித், மூன்றாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் அளவுக்கு உயர்ந்ததை கோலிவுட்...

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஜய் நடிப்பது ஏன்?

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் திடீரென வருமான வரித்துறையினர்களின் சோதனை காரணமாக...

'நானும் ரவுடிதான்' நயன் கேரக்டர். இதுவரை வெளிவராத தகவல்

தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடித்துள்ள 'நானும் ரெளடிதான்' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளதாக கூறப்படுகிறது...

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'தனி ஒருவன்' ரவி?

அனேகன் வெற்றி படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஹீரோ யார்? என்பது குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது...